தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் : 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

ராமநாதபுரம்,ஜூலை.08:-

ராமநாதபுரம் தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் (ராமநாதபுரம் கோட்டம்) சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கோட்டச் செயலாளர் மாநில அமைப்பு செயலாளர் எஸ்.சேகர் தலைமையில் நடைபெற்றது.

GDSகளுக்கு 8-வது ஊதிய கமிட்டியை அமைத்திடு,கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்து, பணிக்கொடையை ரூ.5 லட்சமாக வழங்கிடு, காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்தி வழங்கிடு, மேளா என்று GDSகளை துன்பப்படுத்தாதே, ஒவ்வொரு நாளும் மேளா என்று தண்டனை வழங்காதே , பொதுச் செயலாளர் இலாக்காவில் இணைத்திடு, மேளாவுக்கு வரும் ஊழியர்களுக்கு TA/DA வழங்கிடு, GDS ஊழியர்களின் வேலை நேரத்தை கணக்கிட்டு இலாகா அந்தஸ்து வழங்கிடு, சிறு, சிறு தவறுக்கு கூட SHOW CASE நோட்டீஸ் வழங்காதே, சம்பளத்துடன் விடுமுறை, பேறு கால விடுமுறை வழங்குவதில் காலம் தாழ்த்தாதே, போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பொறுப்புத் தலைவர் முருகேசன் , பொருளாளர் சுப்பிரமணியன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button