தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் அண்ணல் பாண்டியனார் நாடார் சங்கம் சார்பில் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா கோலாகலம் : தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ பங்கேற்பு

ராமநாதபுரம்,ஜூலை.16:-

ராமநாதபுரத்தில் முன்னாள் முதலமைச்சர், கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா அண்ணல் பாண்டியனார் நாடார் சங்கம் சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சங்க பொருளாளர் மோகன் தலைமை வகித்தார்.தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார்.செயலாளர் ஞானசேகரன் அனைவரையும் வரவேற்றார்.காமராஜர் உருவப்படத்திற்கு ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ மலர் தூவி மரியாதை செலுத்தி உரையாற்றினார்.

நடிகர்கள் இமான் அண்ணாச்சி, இளங்கோவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.கடந்த கல்வியாண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மேதலோடை நாடார் மகாஜன சங்க உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் தரணி ஸ்ரீ, கனி ஸ்ரீ மாணவர் சுபாஷ், அரசரடி பண்டல் நாடார் மகாஜன சங்க சேர்மத்தாய் வாசன் உயர்நிலைப்பள்ளி மாணவி ஜெயஸ்ரீ, மாணவர் கனிஷ்கர் மாணவி அபி, ராமநாதபுரம் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த உயர் இலக்கு பள்ளி மாணவர் வெள்ளரி ஓடையைச் சேர்ந்த ஸ்ரீ சாந்த், சிபிஎஸ்இ தேர்வில் மாநில அளவில் 3-வது இடம் பிடித்த மாணவி தரணிகா ஆகியோருக்கு பதக்கம், கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

காமராஜரின் வாழ்க்கை வரலாறு பற்றி ஒயிலாட்டம் மூலம் வெளிப்படுத்திய அரசு இசைப்பள்ளி ஒயிலாட்ட ஆசான் கீழக்கோட்டை ராமகிருஷ்ணன், முத்தமிழ் மகளிர் ஒயிலாட்ட குழு தனலட்சுமி ஆகியோரை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ பாராட்டினார். நகர் மன்ற தலைவர்கள் ஆர்.கே.கார்மேகம் (ராமநாதபுரம்) செஹானாஸ் ஆபீதா (கீழக்கரை), துணைத்தலைவர்கள் டி.ஆர்.பிரவீன் தங்கம் (ராமநாதபுரம்), வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான் (கீழக்கரை), ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் காளிதாஸ்,ஜவா (எ) முஹம்மது ஜஹாங்கீர்,தி.மு.க சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் முஹம்மது சலாவுதீன், மண்டபம் ஒன்றிய தி.மு.க செயலாளர் கே.ஜே.பிரவீன் (மேற்கு) வீ.முத்துக்குமார் (மத்தி), உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஆர்.கே.கே.கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button