தமிழ்நாடு
கீழக்கரையில் 46 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது…!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மாயாகுளம் நைனாரப்பா தர்ஹா பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக ஹூருல் முஷரப் (25),முஹம்மது ஜெசீர்கான் (29), கருணை முஹம்மது அனஸ்கான் (45) ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் மேலும் பலர் சிக்க வாய்ப்புள்ளதாக தகவல் கூறப்படுகிறது.




