தொண்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டரிடம் மனு : மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவு
ராமநாதபுரம்,ஜூலை.16:-
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், திருவாடானை ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் , நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு சென்று, நடைபெற்று வரும் வீடுகள் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது ஊராட்சியில் வசித்து வரும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் நிரந்தர குடியிருப்பு வசதியை ஏற்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசின் நரிக்குறவர் சிறப்பு குடியிருப்புத் திட்டம் (NSKM – Narikuravar Special Housing Scheme) மூலம் 17 இலவச வீடுகள் கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 03 வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளின் கட்டுமானப் பணிகள் பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருகின்றன.
நரிக்குறவர் சமூகத்தினர் பாரம்பரியமாக மணிமாலை, பாசிமணி ஆபரணங்கள், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் வகையில், பாதுகாப்பான நிரந்தர குடியிருப்புகளை வழங்கும் இச்சிறப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
தொடர்ந்து, நரிக்குறவர் சமூக மக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து தமிழ்நாடு அரசின் அனைத்து நலத்திட்டங்களும் உரிய பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும், நிலுவையில் உள்ள அனைத்து வீடுகளின் கட்டுமானப் பணிகளையும் உயர்தரத்துடன் அடுத்த மூன்று மாதங்களுக்குள் முழுமையாக நிறைவு செய்து, பயனாளிகளிடம் வீடுகளை விரைந்து ஒப்படைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில் திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.




