ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில்2,670 பேருக்கு வேலைவாய்ப்பு : விக்ரம் சோலார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை, ஜூலை.10:-
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் நேற்று (9.7.2026) தலைமைச் செயலகத்தில். தொழில். முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் திருநெல்வேலி மாவட்டம். சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில் 15,037 கோடி ரூபாய் முதலீட்டில், 2.670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
விக்ரம் சோலார் நிறுவனம்
விக்ரம் சோலார் குழுமம் தமிழ்நாட்டில், ஒரகடம் மற்றும் வல்லம் ஆகிய இரண்டு இடங்களில் சூரியஒளி மின்னழுத்த (Solar PV) தொகுதி உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளது. மேலும், திருநெல்வேலி மாவட்டம். கங்கைகொண்டானில் சூரியஒளி மின்னழுத்த செல்கள் தொகுப்புகளுக்கான ஒருங்கிணைந்த உற்பத்தி மற்றும் வளாகத்தையும் நிறுவியுள்ளது.
இந்நிலையில், நேற்று (9.7.2026) திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற் பூங்காவில். 15.037 கோடி ரூபாய் முதலீட்டில். 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் செல்வி எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார். இ.ஆ.ப. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார். இ.ஆ.ப. வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. தீபக் ஜேக்கப். இ.ஆ.ப. விக்ரம் சோலார் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ஞானேஷ் சௌத்ரி, தலைமைச் செயல் அலுவலர் திரு. அருண் மிட்டல், மூலதன முதலீட்டுத் திட்ட இயக்குநர் திரு. அஷ்வினி அகர்வால், இயக்குநர் குழுவின் ஆலோசகர் திரு. ஜே.எஸ். பஜாஜ், இ.ஆ.ப. (ஓய்வு) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




