தமிழ்நாடு

ராமேசுவரம் கெந்தமான பருவதம் பகுதியில் ரூ.10.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகள் : மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு

ராமேசுவரம்,ஜூலை.09:-

ராமநாதபுரம் மாவட்டம்,ராமேசுவரம் வட்டம், கெந்தமான பருவதம் பகுதியில் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் ரூ.10.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம், தரம் மற்றும் பணிகளை திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்ததுடன், பணிகளை தரமாகவும் விரைவாகவும் நிறைவு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, ராமேசுவரம் நகராட்சி ஆணையாளர் ஆண்டவன், உதவி பொறியாளர் ஹரி கார்த்திக் , பணி மேற்பார்வையாளர் ஜெகதீஷன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button