தமிழ்நாடு

ஈரோடு மாவட்ட ஒரு கால பூஜை திருக்கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கும் விழா

ஈரோடு, ஜூலை 04.

கோபி சட்டமன்ற உறுப்பினர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தலைமையில் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் விழா கோபி செட்டிபாளையம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில்,ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கால பூஜை திருக்கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.


அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில், பாரியூர், கோபி  தலைமை மாண்புமிகு K.A. செங்கோட்டையன் அவர்கள்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்

விழாவின் நோக்கம்


அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜை திருக்கோயில்களில் தினசரி பூஜைகள் தடையின்றி நடைபெறும் வகையில், தேவையான பூஜை பொருட்கள், உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் கோயில்களின் வழிபாட்டு முறைகள் மேலும் சிறப்பாக நடைபெறும்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான ஒரு கால பூஜை கோயில்களின் அர்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.இந்து சமய அறநிலையத்துறையின் இந்த திட்டம் மூலம் சிறிய கோயில்களில் வழிபாடு சிறப்பாக நடக்கும். கோபி, அந்தியூர், சத்தி பகுதி கோயில் நிர்வாகிகள் இந்த விழாவில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button