தமிழ்நாடுமாவட்டச் செய்திகள்

மண்டபம் அருகே 108 சங்காபிஷேகம், பிரதிஷ்டை விழா..!

ராமநாதபுரம், ஜூலை 4-

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை சிவன் கோயில் தெரு ஸ்ரீபாலாம்பிகை, ஸ்ரீசௌடாம்பிகை, சமேத ஸ்ரீ ராமலிங்க சுவாமி ஆலய வருடாபிஷேகம், 108 சங்காபிஷேகம், ஸ்ரீ தத்தாத்ரேயர் பிரதிதிஷ்டை நடந்தது.


அதனையொட்டி ஜூலை 2 ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து, ஹோம பூஜைகளுக்குப் பின் முதல் கால யாக பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை 8 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, சூர்ய கும்ப பூஜை, கோ பூஜை, 2 ஆம் கால யாக பூஜை, அக்னி குண்ட வழிபாடு நடந்தன.

அதன் தொடர்ச்சியாக, 108 சங்காபிஷேகம், 11 கடங்கள் புறப்பாடு நடந்தன. மதியம் 12:15 மணியளவில் கோபுரக் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. உலக சிவனடியார் திருக் கூட்டம் நிர்வாகத்தலைவர் முத்துப் பாண்டி திருவாசகம் முற்றோதினர். ஆலய நிறுவனர் நாகராஜ் கும்பாபிஷேக பணிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button