குற்றம் & சட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா அழிப்பு

ராமநாதபுரம், ஜூலை.04:-

ராமநாதபுரம் காவல் சரகம், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 161 (ராமநாதபுரம்-95, சிவகங்கை-66) போதைப்பொருள் தடுப்பு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள,கஞ்சாக்களை அழிப்பதற்கு புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மற்றும் சம்மந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றில் அனுமதி பெறப்பட்டது.மேற்படி வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 904.485 கிலோ கிராம் (ராமநாதபுரம்-800.908 கி.கி, சிவகங்கை-103.577 கி.கி) கஞ்சாவானது ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி தலைமையிலான போதைபொருட்கள் அழிப்பு குழு மூலம் நேற்று 03.07.2026-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம்,நாங்குநேரி அருகே 2 Aseptic System (Bio-Medical Waste Management Company) என்ற கஞ்சா அழிப்பு மையத்தில் வைத்து, ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி முனைவர்.நெ.மணிவண்ணன் ஐ.பி.எஸ் தலைமையில், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் முன்னிலையில் பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button