தமிழ்நாடு

சிக்ரி அரிமான பரிசோதனை மையத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம்..!

ராமநாதபுரம், ஜூலை 4-

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சிக்ரி அரிமான பரிசோதனை மையத்தில் அரிப்பு அறிவியல் மற்றும் தடுப்பு முறைகள்: ஒரு செயல்முறைப் பயிற்சித் திட்டம்” குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் நடந்தது. காரைக்குடி சிஎஸ்ஐஆர் , சிஇசிஆர்ஐயின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தலைவர் டாக்டர் ஜோனாஸ் டேவிட்சன் தலைமை வகித்தார். அசோக் பாலமுருகன் பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்தார். இடாக்டர் எஸ். சிவபிரகாஷ் மற்றும் டாக்டர் டேனியல் ரெனால்ட் ஜோசப் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

அரிப்பு மற்றும் பொருள் அறிவியல் பிரிவின் தலைவர் டாக்டர் ராகேஷ் சந்திர பாரிக் பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார். காரைக்குடி சிஎஸ்ஐஆர் , சிஇசிஆர்ஐயின்யை சேர்ந்த பல விஞ்ஞானிகள் இதில் பங்கேற்று சிறப்புரையாற்றினர். பாடங்களை சிறப்பாகப் புரிந்துகொள்ளும் வகையில், மண்டபம் சிஎஸ்ஐஆர் , சிஇசிஆர்ஐயின் விஞ்ஞானிகள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் செய்முறைப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. 29.06.2026 முதல் 03.07.2026 வரை ஒரு வாரம் நடைபெற்ற இத்திட்டத்தின் 53 கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button