தமிழ்நாடு

மேலவலசை கிராம மக்கள் குடிக்க தண்ணீர் வேண்டி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு

ராமநாதபுரம்,ஜூலை.13:-

ராமநாதபுரம் அருகேயுள்ள மேலவலசை கிராமத்தில் குடிக்க தண்ணீர் இல்லாததால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காலிக்குடங்களை கவலையுடன் தலையில் சுமந்து கொண்டு காத்திருந்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி யூனியன், காஞ்சிரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மேலவலசை கிராமத்தில் சுமார் 170 குடும்பங்கள் குடிநீர் வசதியின்றி தவித்து வருவதாகவும், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அரசால் அமைக்கப்பட்ட குடிநீர் கிணற்றிற்கு மின் இணைப்பு இல்லாமல்,மோட்டர் வசதி வழங்கப்படாமல் உள்ளதால் குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக காட்சி பொருளாகவே உள்ளது என்றும், குளிப்பதற்கு கூட பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம் என்றும்,அரசால் வழங்கப்பட்ட குடிநீர் கிணற்றிற்கு மின் இணைப்புடன் மோட்டார் பொருத்தி தங்களது கிராமத்திற்கு குடிதண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காலிக்குடங்களோடு “வேண்டும் வேண்டும் குடிக்க தண்ணீர் வேண்டும்” என்று கோஷமிட்டபடி மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரனிடம் அந்த கிராம மக்கள் மனு அளித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button