தமிழ்நாடு

செய்யாம்பாளையத்தில் புதிய நியாயவிலைக்கடை கட்டிடம் திறப்பு : அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், நல்லகவுண்டன்பாளையம், கரட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் செய்யாம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை கட்டிடம் திறக்கப்பட்டது.மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.K.A.செங்கோட்டையன் அவர்கள் நாடா வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.உடன் இருந்தவர்கள் உடன் திருப்பூர் (வடக்கு) சட்டமன்ற உறுப்பினர் வி.சத்தியபாமா அவர்கள், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்த கடையின் பயன்
இந்த புதிய நியாயவிலைக்கடை மூலம் செய்யாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் அரிசி, பருப்பு, சர்கரை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை எளிதாக பெற முடியும். சுத்தமான, விசாலமான கட்டிடம் என்பதால் மக்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button