குற்றம் & சட்டம்

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்: எஸ்பி டி.வி.கிரண் ஸ்ருதி ஐபிஎஸ்., அதிரடி உத்தரவு!

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) டி.வி.கிரண் ஸ்ருதி இ.கா.ப. (ஐபிஎஸ்) தலைமை தாங்கினார்.


மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், தங்களது பல்வேறு பிரச்சனைகள் மற்றும் புகார்கள் குறித்த மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் வழங்கினர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட எஸ்பி பொது மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்ட எஸ்பி டி.வி.கிரண் ஸ்ருதி அவர்கள், மனுதாரர்களின் குறைகளையும், புகார்களையும் கனிவோடு கேட்டறிந்தார்.


நிலப் பிரச்சனைகள், குடும்பத் தகராறுகள், மோசடி புகார்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் முன்வைத்தனர்.


அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு


மனுக்களைப் பரிசீலித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்கள் அளித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மேலும், “பொதுமக்கள் அளித்துள்ள மனுக்கள் மீது எவ்வித தொய்வும் இன்றி, விசாரணையை மிக விரைவாகவும், சட்டத்திற்கு உட்பட்டும் முடிக்க வேண்டும்” என்று சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு மற்றும் காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு எஸ்பி அவர்கள் அதிரடியாக உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள், காவலர்கள் பலர் கலந்து கொண்டனர். குறைதீர்ப்பு கூட்டத்தில் எஸ்பி-யின் இந்த விரைவான நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button