ராமநாதபுரம் நகராட்சியில் திடீர் சோதனை – கணக்கில் வராத பணம் பறிமுதல்
சந்தேகத்திற்குரிய GPay பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டது

ராமநாதபுரம், ஜூலை.04:-
ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று மாலை ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையின் போது, கணக்கில் வராத ரொக்கப் பணம் ரூ.3,66,000/- அலுவலக வளாகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது.

மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை சரிபார்த்ததில், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் என்பவரின் கணக்கில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.25,00,000/- அளவிற்கு சந்தேகத்திற்குரிய GPay பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது.
கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணத்தின் ஆதாரம் மற்றும் சந்தேகத்திற்குரிய டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புகார் தெரிவிக்கலாம்:-
பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் ஏதேனும் லஞ்சம் கோருதல், லஞ்சம் பெறுதல் அல்லது பிற ஊழல் தொடர்பான செயல்பாடுகள் குறித்து தகவல் அறிந்தால்,ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது 9498215697, 9498652166, 9498652167, 9498652169 ஆகிய கைபேசி எண்களிலோ, 04567-230036 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் மற்றும் புகார்கள் உரிய ரகசியத்துடன் கையாளப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.




