தமிழ்நாடுமாவட்டச் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதுக்கான (PMRBP) இணையவழிப் பரிந்துரைகள் : கலெக்டர் தகவல்

ராமநாதபுரம், ஜூலை.03:-

ராமநாதபுரம் மாவட்ட கலெகடர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் (PMRBP) என்பது பல்வேறு துறைகளில் குழந்தைகளின் சிறப்பான சாதனைகளை அங்கீகரிப்பதற்காக இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு மதிப்புமிக்க தேசிய விருதாகும் தகுதியுள்ள இளம் நபர்களைக் கௌரவிப்பதற்காக நிறுவப்பட்ட இந்த விருது,வீர தீர செயல், சமூக சேவை சுற்று சூழல், விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. மேற்காணும் துறைகளில் சிறந்து விளங்கி, சிறப்பான பங்களிப்புகளை வெளிப்படுத்திய 18 வயதுக்குட்பட்ட பரிந்துரைக்கப்படுவதற்குத் தகுதியுடையவர்கள். (31.07.2026-படி) குழந்தைகள்

பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதுக்கான (PMRBP) இணையவழிப் பரிந்துரைகள் தற்பொழுது தொடங்கியுள்ளன. மேற்காணும் துறைகளில் கடந்த இரண்டு வருடங்களுக்குள் (31.07.2024- 31.07.2026) சிறப்பாக செயல்பட்டு சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்திய குழந்தைகளை http://awards.gov.in – எனும் வலைதளத்தில் விருதிற்கு பரிந்துரைக்காலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button