தமிழ்நாடுமாவட்டச் செய்திகள்

கீழக்கரை நகராட்சியில் கால்நடைகள் சிறைபிடிப்பு…!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில்,கீழக்கரை நகராட்சி கமிஷனர் கிருஷ்ணவேணி அறிவுறுத்தலின் படி கீழக்கரை நகராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 15 கால்நடைகள் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 பிரிவு 249-ன் கீழ் பிடிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிடிக்கப்பட்ட கால்நடைகளை கால்நடை உரிமையாளர்கள் 48 மணி நேரத்தில் கால்நடை ஒன்றுக்கு ரூ.5000/- அபராதம் செலுத்தி பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.தவறும் பட்சத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023 பிரிவு 249 (7)ன் படி பகிரங்க பொது ஏலம் விடப்படும் என கமிஷனர் தெரிவித்தார்.

இதில் பொறியாளர் அருள், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா மற்றும் மேற்பார்வையாளர்கள் சக்திவேல், பாலா உடன் இருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button