தமிழ்நாடு

போக்குவரத்து அலர்ட் ..!திம்பம் மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி பழுது! போக்குவரத்து பாதிப்பு…

திம்பம்:

கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று, இன்று திம்பம் மலைப்பாதையில் 26-வது கொண்ட ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென பழுதாகி நின்றது லாரி விவரம் A.M. Supply Chain Solutions Pvt. Ltd-க்கு சொந்தமான கண்டெய்னர் லாரி.

திம்பம் மலைப்பாதை 26-வது ஹேர்பின் பெண்ட் பாதிப்பு லாரி சாலையின் நடுவில் நின்றதால், மலைப்பாதையில் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது பயணிகள் கோரிக்கை மலைப்பாதையில் சிக்கியுள்ள வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்


அதிகாரிகள் நடவடிக்கை


தகவல் அறிந்து காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.திம்பம் மலைப்பாதை குறுகலானது. இதுபோன்ற பழுது ஏற்பட்டால் போக்குவரத்து முழுவதும் பாதிக்கும். பயணத்திற்கு முன் சாலை நிலவரத்தை அறிந்து செல்லவும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button