தமிழ்நாடு

தொண்டி செய்யது முகமது அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிமாறுதலில் செல்லும் தலைமை ஆசிரியருக்கு பிரிவு உபச்சார விழா

ராமநாதபுரம்,ஜூலை.09:-

தொண்டி செய்யது முகமது அரசு மேல்நிலைப்பள்ளி பணியாற்றிய தலைமை ஆசிரியர் அருள் பிரகாசம் சிவகங்கை மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மாங்குடி பள்ளிக்கு பணி மாறுதல் காரணமாக செல்வதால் பிரிவு உபச்சார விழா மற்றும் இப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சியை கொடுக்க முழு ஈடுபாட்டுடன் பணி செய்த ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.தலைமை ஆசிரியர் அருள் பிரகாசத்திற்க்கு அன்பாசிரியர் விருது வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முன்னாள் மாணவர் எம்.சாதிக் பாட்சா,பேரூராட்சி கவுன்சிலர் பெரியசாமி,இப்பள்ளி முன்னாள் மாணவர் அபுஹாரிஸ் கரீம் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டு தலைமையாசிரியரை கௌரவப்படுத்தினர். இவ்வருடம் 10,12-ம் வகுப்பில் 100% தேர்ச்சிக்காக மாணவர்கள் சிறந்த கல்வி கற்க பாடுபடுவது என ஆசிரியர்கள் உறுதி கூறினர்.இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் அருள் பிரகாசம்,பொறுப்பு தலைமை ஆசிரியர் இனிகோ மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பங்கு பெற்று சிறப்பித்தனர். முடிவில் ஆசிரியர் காளிராஜ் நன்றி கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button