அரசியல்

“ஓடி ஒளிந்ததை” ஓடி ஒளிந்தீர்கள் என்று தானே சொல்ல முடியும்? : விஜய்க்கு அதிமுக கேள்வி

“அன்று கரூருக்கு தாமதமாக வந்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்” என்று ஒரு வார்த்தை உங்களது உரையில் இருந்ததா? தனது தவறுகளை ஒப்புக்கொள்ள மனமில்லாத ஒருவர் எப்படி தலைவராக முடியும்? என்று அதிமுக எக்ஸ்தளத்தில் காட்டமாக கேள்வி கேட்டுள்ளது.

அதில், “யார் கூட்டுக் களவாணிகள்?
திமுக-வை எதிர்த்து 234 தொகுதிகளிலும் களம் கண்டு, இன்று வரை தனித்த அடையாளம் கொண்ட எதிர்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாங்களா?

அல்லது, திமுக-வின் வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்த திமுகவின் கூட்டணிக் கட்சிகளை இழுத்து, கூட்டுக் களவாணித்தனம் செய்து ஆட்சியில் அமர்ந்திருக்கும் நீங்களா?

“அன்று கரூருக்கு தாமதமாக வந்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்” என்று ஒரு வார்த்தை உங்களது உரையில் இருந்ததா? தனது தவறுகளை ஒப்புக்கொள்ள மனமில்லாத ஒருவர் எப்படி தலைவராக முடியும்?

ஊதிப் பெரிதாக்கப்பட்ட வெற்று பிம்ப முதல்வர் தான் நீங்கள்!

கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் எத்தனை மக்களை சந்தித்தீர்கள்? மக்களுக்கான அரசியல் என்று என்ன பேசினீர்கள்?

குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல கூட அல்ல- மிட்டாய்க்கு அடம் பிடிப்பது போலவே அடம் பிடியுங்கள் என்று கூறி தவறான வழியில் வாக்கு கேட்ட நீங்கள் எல்லாம் பேசலாமா?

கரூர் துயரம் நடந்த போது “ஓடி ஒளிந்ததை” ஓடி ஒளிந்தீர்கள் என்று தானே சொல்ல முடியும்? விழுப்புரத்தில் முன்பொரு முறை பார்த்த உங்கள் ஓட்டத்தை திருச்சி விமான நிலையத்தில் தமிழகமே பார்த்ததே?

கரூர் துயரம் நடந்த மூன்றே மாதங்களில் மலேசியா ஆடியோ லாஞ்ச் மேடையில் “Blastu Blastu” என்று போட்டீர்களே… அது என்ன “ஜனநாயகக் குத்தாட்டமா?” மக்கள் துயரத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் குத்தாட்டம் போட்ட நீங்கள் எங்களைப் பற்றி பேசுவதா? ”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button