குற்றம் & சட்டம்
பரமக்குடியில் புது பொலிவுடன் களமிறங்கிய ‘ஹலோ போலீஸ்’: 24 மணி நேர ரோந்து தீவிரம்

பரமக்குடி, ஜூலை.13:-
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் உத்தரவின் பேரில் பரமக்குடி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் ‘ஹலோ போலீஸ்’ என்ற புதிய ரோந்து பிரிவு களமிறக்கப்பட்டுள்ளது.
முக்கிய நோக்கங்கள் பரமக்குடியில் 24 மணி நேரமும் காவல்துறை ரோந்து பணியில் இருக்கும்.சந்தேகப்படும் வகையில் நிற்கும் நபர்களை கண்காணிக்கவும்,பள்ளி மாணவர்களை பாதுகாப்பை உறுதி படுத்தவும்,போதை பொருள்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.மேலும் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
குற்றங்களை தடுக்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த சிறப்பு ரோந்து பணி தொடங்கப்பட்டுள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.




