குற்றம் & சட்டம்

பரமக்குடி அருகே 15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா கைது!

ராமநாதபுரம்,ஜூலை.10:-

தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த 15 வயது பேத்தியை 3 மாதம் கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தாவை பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள மூவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து அதே கிராமத்தில் அவரது மனைவியும் 15 வயது மகளும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது வீட்டுக்கு அருகே வசித்து வந்த ரவிச்சந்திரனின் மாமனாரும் சிறுமியின் தாத்தாவுமான ராசு (73) என்பவர் 15 வயது சிறுமியை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அவரது அம்மாவிடம் சொல்ல அவர் தாத்தா ராசுவை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி மதியம் வீட்டிலிருந்த சிறுமியை யாரும் இல்லாத நேரத்தில் கட்டாயப்படுத்தி தாத்தா ராசு உடலுறவு கொண்டதாகவும் அதனை தொடர்ந்து சிறுமி பல முறை உடலுறவு கொண்டதன் காரணமாக தற்போது அந்த சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக பரமக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராசு மீது அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரமக்குடி அருகே 5 வயது பேட்டி 15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button