தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.4 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்

அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

பனைக்குளம்,ஜீலை.01:-


ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம், சித்தார்கோட்டை, தேவிபட்டிணம், அரசூர், நகரிகாத்தான் ஆகிய பகுதிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.


இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் யூனியன், பனைக்குளத்தில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கூடுதல் கட்டிடத்தையும்,ராமநாதபுரம் யூனியன்,சித்தார்கோட்டையில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கூடுதல் கட்டிடத்தையும்,ராமநாதபுரம் யூனியன் தேவிபட்டினத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கூடுதல் கட்டடத்தையும், திருவாடானை வட்டம், அரசூரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும், திருவாடானை வட்டம், நகரிகாத்தானில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அரசு துணை சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தினையும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.


அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாடு மக்களின் மீது மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றார். குறிப்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் கிராமப்புற மக்களின் நலனை பேணிக்காத்திடும் வகையில் மருத்துவமனைகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கிராமப்புற மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் செல்வதை தவிர்க்கும் பொருட்டு, பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி மருத்துவமனைகளின் தரங்களை உயர்த்துவதன் மூலம் கிராமப்புற மக்கள் பயனடைந்து வருகின்றனர்.


நேற்றைய தினம் பனைக்குளம், சித்தார்கோட்டை,தேவிபட்டினம், அரசூர், நகரிகாத்தான் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் கூடுதல் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை, போதிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சிகளில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அர்ஜூன் குமார், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.நடராஜன்,தலைமை மருத்துவ அலுவலர் மரு.ரமேஷ் பாபு, வட்டார மருத்துவ அலுவலர்கள் மரு.ஜென்னத் யாஸ்மின், மரு.வைதேகி, உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன், உதவி பொறியாளர் பிரியங்கா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வி.சி.க பொருளாளரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜீவ் பதில்

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் மாமனார் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பணியிட மாறுதலுக்கு லஞ்சம் பெற்றதாக நேற்று எக்ஸ் வலைதளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் புகார் ஒன்றை முன் வைத்திருந்தார். அது குறித்து பதில் அளித்த அமைச்சர் தன் மீது எந்த குற்றமும் இல்லை, ஆதாரம் இருந்தால் நிரூபிக்கலாம், நான் முதல்வருக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கிறேன். என் மீது குற்றம் சாட்டும் நபர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button