பண்பகம் அறக்கட்டளை சார்பில் இஸ்லாமிய புத்தாண்டை முன்னிட்டு 10 ஏழை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்
கீழக்கரை, ஜீலை.01:-
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம் ஏர்வாடி தாருல் குல்கிய்யா மதறாவில் உள்ள மாமன்னர் ஔரங்கசீப் அரங்கத்தில்,பண்பகம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 10 ஏழை குடும்பங்களுக்கு சிறு தொழில் தொடங்கி தன்னிறைவு பெறும் வகையில் தையல் இயந்திரங்கள்,கிரைண்டர்கள்,மிக்ஸிகள் உள்ளிட்ட வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஐக்கிய நல கூட்டமைப்பின் ஏர்வாடி பொறுப்பாளரும்,பண்பகம் அறக்கட்டளையின் கௌரவ ஆலோசகருமான சமூக சேவகர் ஹாஜியார் சித்தீக் ரஹ்மான் அம்பலம் தலைமை தாங்கினார்.ஏர்வாடி தர்ஹா ஜீம்ஆ மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலவி ஹாஃபிழ் முர்ஸல் ஃபைஜி இறைவசனம் ஓதி துவக்கி வைத்தார்.

எலைட் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் முஹம்மது அலி ஜின்னா,தமிழக மெட்ரோ துனை பொறியாளர் சமூக சேவகர் இர்பான் கான்,பண்பகம் பொருளாளர் உஸாமா (எ) முஹம்மது முஸ்தபா, பண்பகம் டிரஸ்டி செய்யது அபூபபக்கர் பாதுஷா மற்றும் பண்பகம் இமாம்கள் முன்னிலை வகித்தார்கள்.சிறப்பு விருந்தினர்களாக பாத்திமா கனி மஹாலின் உரிமையாளரும், சமூக சேவகருமான அபுல் ஹஸன்,ஏர்வாடி வழிகாட்டி மைய்யத்தின் பொறுப்பாளரும்,சமூக சேவகருமான வரிசை,கீழக்கரை மஜ்மவுல் ஹைராத்தியா சங்கத்தின் தலைவரும், சமூக சேவகருமான நூருல் ஜமான், சென்னை சமூக சேவகர் ஹைதர் அலிகான்,சமூக சேவகர் பயாஸ், ஏர்வாடி அல்மாலிக் உதவும் குழு தலைவர் சமூக சேவகர் ஜெய்னுல் அப்பாஸ்,பண்பகம் குருதி கொடையாளர்கள் அணியின் பொறுப்பாளர் மௌலவி நஜ்முத்தீன் ஸதகீ ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்களை வழங்கினர்.ஏழை குடும்பங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல்,அவர்கள் தங்களது சொந்த உழைப்பின் மூலம் வருமானம் ஈட்டி தன்னிறைவு அடையச் செய்வதே உண்மையான சமூகப் பணி,பண்பகம் அறக்கட்டளையின் இத்தகைய மனிதநேய சேவைகள் தொடர்ந்து விரிவடைய வேண்டும் என்று நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பாராட்டினர்.
விழாவில் ஏராளமான சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.முடிவில் பண்பகம் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் முஹம்மது இஸ்ஹாக் நன்றியுரை வழங்கினார்.இமாம் ஜல்வத் ஜமாஅத் து ஆ ஓதியதுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.




