ராமநாதபுரம் மாவட்டத்தில் 2026-ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள்: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

ராமநாதபுரம்,ஜூலை.09:-
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
சமூகநலத்துறையின் மூலம் 2026-ஆம் ஆண்டிற்கான ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள் (Jeevan Raksha Padak Award) தகுதியான தனிநபர்களிடமிருந்து கருத்துருக்கள் வருகிற ஜீலை 31-(31.07.2026ஆம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: 1.நீரில் மூழ்குதல், 2.விபத்துகள் (ம) தீ விபத்துகள், 3.மின்சாரம் பாய்தல், 4.நிலச்சரிவு, 5.விலங்குகள் தாக்குதல், 6.சுரங்க மீட்புப்பணிகள்.
மேற்சொன்ன இக்கட்டான சூழ்நிலைகளில், பிறருடைய உயிரைக் காப்பாற்றத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் செயல்பட்ட நபர்களுக்கு இவ்விருது 1.சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம், (Sarvottam Jeevan Raksha Padak) 2. உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் (Uttam Jeevan Raksha Padak) 3.ஜீவன் ரக்ஷா பதக்கம் (Jeevan Raksha Padak) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.
காலவரம்பு:-
ஊயிரைக் காப்பாற்றிய வீரம் சார்ந்த செயல் 01.10.2024 (அக்டோபர்-2024) க்கு முன்னர் நிகழ்ந்ததாக இருக்கக்கூடாது. அதற்குப்பின் நிகழ்ந்த நிகழ்வுகள் மட்டுமே பரீசிலிக்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள்:-
தகுதியான நபர்களின் பரிந்துரையுடன் பின்வரும் விவரங்கள் இணைக்கப்பட வேண்டும்.
1.பரிந்துரை படிவம் ( Annexure 1), 2.சுயவிவரக் குறிப்பு (Bio-data), 3.நிகழ்வின் வரிசைக்கிரமான விவரிப்பு மற்றும் துணிச்சலை விளக்கும் அறிக்கை ( அதிகபட்சம் 250 வார்த்தைகள்), 4.நடத்தை மற்றும் பின்னணி சரிபார்ப்புச் சான்றிதழ் (Character and antecedents verification certificate – Annexure – 2)
மேற்காணும் தகுதியினை உடைய நபர்கள் 31.07.2026-க்குள் கருத்துருவினை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், ராமநாதபுரம் மாவட்டம் என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04567-230466 -ஐ என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




