குற்றம் & சட்டம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரம் அருகே திருடு போன 48 3/4 பவுன் தங்க நகைகள் முழுமையாக மீட்பு : ஒருவர் கைது..!

ராமநாதபுரம், ஜூலை.03:-

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் மண்டலமாணிக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 19.06.2026 அன்று பூமாதேவி என்பவரின் வீட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்கில் மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட செந்தில் குமார் என்பவரை புதுக்கோட்டையில் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 48 3/4 பவுன் தங்க நகைகள் முழுமையாக பறிமுதல் செய்யப்பட்டு மீட்கப்பட்டன.

இவ்வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து,திருடப்பட்ட நகைகளை முழுமையாக மீட்ட போலீசாரின் சிறப்பான பணியை போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் வெகுவாக பாராட்டினார்.மேலும் இது போன்ற குற்றங்களை தடுக்கவும்,குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை தொடர்ந்து உறுதியுடன் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button