அந்தியூர் அருகே கோவிலில் திருடு போன 2 வெண்கல நந்தி சிலைகள் கண்டுபிடிப்பு

வனத்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்த 3 நபர்களிடம் இருந்து மீட்பு அந்தியூர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கர் தட்டக்கரை பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் கிடைத்த அதிர்சி தகவல் விசாரணையில், மட்ட மரத்தல்லி பகுதியில் உள்ள ஸ்ரீ சிவலிங்கேஸ்வரா கோயிலில் திருடு போன 2 வெண்கல நந்தி சிலைகள் அவர்களிடம் இருப்பது தெரியவந்தது வனத்துறையினர் உடனடியாக அந்த 2 சிலைகளையும் கைப்பற்றி, மேல் நடவடிக்கைக்காக பர்கர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தற்போதைய நிலை வழக்கு பதிவு செய்த காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சகாயராஜ் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். சிலைகள் திருடப்பட்டது எப்போது, வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெறுகிறது.கோவில் பக்தர்கள் மகிழ்ச்சி நூற்றாண்டு பழமையான கோவில் சிலைகள் மீட்கப்பட்டதை அறிந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வனத்துறையினர் மற்றும் காவல்துறைக்கு நன்றி தெரிவித்தனர்




