ராமநாதபுரம் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் அழிப்பு: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை…!

ராமநாதபுரம்,ஜூலை.09:-
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில் , உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் Dr.S.P.சுரேஷ் தலைமையில் ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் M.ஜெயராஜ் ராமேசுவரம் உணவு பாதுகாப்பு அலுவலர் R.முருகன், பரமக்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் வெண்ணிலா , கமுதி , முதுகுளத்தூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சத்தீஸ்வரன் , கடலாடி , போகலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துச்சாமி , கீழக்கரை வட்டார உணவு பாதுகாப்பாக அலுவலர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் இணைந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தி சுமார் 85 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா , குட்கா ஆகியவற்றை கைப்பற்றினர்.விற்ற கடைகளுக்கு அபராதம் விதித்து கடைகள் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட புகையிலைப் பொருட்களை நகராட்சி குப்பை கிடங்கில் சுகாதாரத்துறை , துப்புரவுத்துறை , காவல்துறை முன்னிலையில் அழிக்கப்பட்டது.







